Pages

Tuesday, April 12, 2011

உபுண்டு அடைவுகளை திறப்பதில் ஒரு சிறு பிரச்னை

உபுண்டுவில் அடைவுகளை திறப்பதில் ஒரு பிரச்சனை அதாவது Places மெனுவில் உள்ள video, downloads, pictures ஆகிய அடைவுகளை திறந்தால் vlc திறப்பதாக நண்பர் என்னிடம் தெரிவித்தார். அதற்கான வழிமுறைகளை கூற தொலைபேசியில் சரிசெய்து கொண்டார். இதேபோல் பிரச்சனை பலருக்கும் வந்திருக்கும்.

அதாவது ஏதேனு ஒரு அடைவில் பாடல்களோ, வீடியோ கோப்புகளோ இருந்தால் அந்த அடைவில் கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் open with other applications->vlc என்று தேர்ந்தெடுத்தால் இதே மாதிரியான பிரச்சனை வரும். அப்படியே தேர்ந்தெடுத்திருந்தால் கீழே உள்ள remember this application for folder filer என்பதில் உள்ள டிக்கினை எடுத்து விட்டிருக்க வேண்டும்.

அதற்கு மேசையின் மீது கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் create folder தேர்ந்தெடுத்து ஒரு அடைவினை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பெயர் ஏதுவும் வைக்க தேவையில்லை.


அவ்வாறு உருவாக்கப்பட்ட அடைவில் கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் open with other applications->file browser என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.




1. file browser ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
2.remember this application for folder file என்பதில் டிக் செய்திட வேண்டும்.

பின்னர் open பொத்தானை அழுத்த Places மெனுவில் உள்ள அனைத்து அடைவுகளும் வழக்கம் போல் திறந்தன.

No comments: