Pages

Saturday, April 30, 2011

உபுண்டு புதிய பதிப்பு 11.04 Natty Narwhal

உபுண்டுவின் புதிய பதிப்பான 11.04 Natty Narwhal கடந்த 28.04.2011 அன்று வெளியிடப்பட்டது.



வழக்கம் போலவே இதிலும் பல புதிய பதிப்புகளை சேர்த்து இருக்கிறார்கள்.

1.Open officeற்க்கு பதிலாக Libreoffice சேர்த்திருக்கிறார்கள்.


2.நெருப்பு நரியின் புதிய பதிப்பான 4ஐ இதில் சேர்த்திருக்கிறார்கள்.


இந்த பதிப்பில் scim input சரிவர வேலை செய்யவில்லை. control+space அழுத்தினால் வேலை செய்ய வில்லை. ஆனால் text editorல் வேலை செய்கிறது.

3.Rythomboxற்க்கு பதில் Banshee சேர்த்திருக்கிறார்கள்



இந்த மீடியா ப்ளேயரை sound iconலும் சேர்த்திருக்கிறார்கள்.


4.Thunderbird ubuntu software centerல் புதிய பதிப்பாக இருக்கிறது.



உபுண்டு புதிய பதிப்பினை என்னுடை மடி கணினியில் முதலில் நிறுவினேன். Gnomeற்க்கு பதிலாக unity desktop மாற்றியிருக்கிறார்கள். முதலில் சிறிது தடுமாற்றமாக இருந்தாலும் எளிதில் பழகிவிடுகிறது.


இதில் + குறியிள்ள இடத்தில் சொடுக்க நிறுவப்பட்ட நிரல்களை காணலாம்.


Network Managerல் wired மற்றும் wireless இணைப்புகள் நல்ல முறையில் இயங்கின.

என்னுடைய broadband modem wifi வசதியிள்ளதால் அதிலிருந்தே இணைப்பினை மடிக்கணினியில் ஏற்படுத்திகொண்டேன். இதற்க்காக எந்த ஒரு driver நிரலையும் நிறுவ தேவையில்லை. எல்லா driver களும் உள்ளிணைந்தே வருகிறது.

இந்த பதிப்பில் shutdown கீயை சொடுக்கினால் வரும் விண்டோவில் system settings என்ற ஆப்ஷனை சொடுக்கினால் ubuntu control centre வருகிறது.

Tuesday, April 26, 2011

உபுண்டுவில் wifi usb adaptor

உபுண்டு மேசைகணினியில் பயன்படுத்துவதற்குகாக ஒரு wifi usb adapter ஒன்று வாங்க வேண்டியிருந்தது. சுமார் ₹ 1100 விலையில் Zyxel என்ற பெயரில் சாதனம் இருந்தது. இதன் பெயர் ZyXEL 802.11g wireless usb adapter G-202.


பின்னர் network connections->wireless சென்றால் இதில் edit பொத்தானை அழுத்தி நம் இருக்கும் இடத்தில் இருக்கும் ip address, proxy server போன்றவைகளை அமைத்தால் இணைப்பு கிடைத்தது.



இதன் driverகள் உபுண்டுவிலேயே இருக்கிறது. இதற்காக வேறு எந்த நிரலையும் நிறுவ தேவையில்லை.


Adapterஐ கணினியில் பொருத்தியவுடனேயே நாம் இருக்குமிடத்தில் இருக்கும் எந்த பெயரில் wifi இருக்கிறதோ அதே பெயரில் இருப்பதை காணலாம்.


நான் இருக்கும் கல்லூரியில் இணைப்பு நன்றாக வேலை செய்கிறது.


Network managerலேயே இணைப்பு நன்றாக கிடைத்தது.

Saturday, April 16, 2011

உபுண்டுவில் txt கோப்புகளை ஆடியோவில் கேட்க

உபுண்டுவில் txt கோப்புகளின் ஆடியோவினை கேட்க உதவுவது gespeaker. இது espeakன் gui வடிவமாகும். இதனை இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

இந்த நிரலினை இயக்க் Applications->Sound & video->Gespeaker செல்ல வேண்டும். இந்த நிரல் செயல்பட துவங்கியவுடன் ஆங்கிலத்தில் வார்த்தைகள் இருக்கும். இதனை தமிழில் மாற்றிக்கொள்ளலாம்.



இதில் insert text to play என்ற இடத்தில் தமிழில் தேவையான வார்த்தைகளை தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர் language என்ற இடத்தில் tamilஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் play பொத்தானை அழுத்தினால் தமிழில் வார்த்தைகள் கேட்கும்.

இந்த தமிழ் வார்த்தைகளை நிரல் ஆரம்பிக்கும்போது கேட்க Edit->preference சென்றால் use custom welcome messageல் டிக் செய்துவிட்டு custom messageல் தமிழில் தட்டச்சு செய்துவிட வேண்டும்.


பின்னர் ஒரு கோப்பில் உள்ளதை படிக்க வேண்டுமென்றால் open சென்று கோப்பினை திறக்க வேண்டும். இப்போது play பொத்தானை அழுத்தினால் நிரல் படிக்க ஆரம்பிக்கும்.

Friday, April 15, 2011

உபுண்டு டெர்மினலில் ஒரு இணைய தளத்தின் ip முகவரி காண

உபுண்டு டெர்மினலில் ஒரு இணைய தளத்தின் IP முகவரியினை கீழ் கண்ட மூன்று கட்டளைகள் மூலம் காண முடியும்.

1.host

2.dig

3.nslookup


உதாரணமாக www.ubuntu.com என்ற தளத்தின் IP முகவரியை காண மேற்கண்ட மூன்று கட்டளைகளை கொடுத்தால் என்ன விடை வரும் என்று பார்ப்போம்.

host www.ubuntu.com


அடுத்ததாக dig கட்டளை கொடுத்தால் அதன் அவுட்புட் பார்க்கலாம்.

dig www.ubuntu.com




மூன்றாவதாக nslookup கட்டளையை பார்ப்போம்.

nslookup www.ubuntu.com

Wednesday, April 13, 2011

உபுண்டுவில் Epson printer drivers

உபுண்டுவின் அடுத்த புதிய பதிப்பான 11.04ல் epson printerகள் கணினியுடன் இணைக்கப்பட்டவுடன் தானாகவே driverகளை தேடி நிறுவிக்கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த driverகள் கிடைக்கும் சுட்டிகள்

1.http://avasys.jp/eng/service/

2.http://www.openprinting.org




உபுண்டுவில் மற்ற பதிப்புக்களிலும் இந்த driver கோப்பினை தரவிறக்கி பயன்படுத்தலாம். மேலும் 268 Epson model inkjet printerகளை 11.04லிருந்து கணினியுடன் அச்சு இயந்திரத்தை இணைத்தவுடன் தானாகவே driverகளை தேடி நிறுவிக்கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

Tuesday, April 12, 2011

உபுண்டு அடைவுகளை திறப்பதில் ஒரு சிறு பிரச்னை

உபுண்டுவில் அடைவுகளை திறப்பதில் ஒரு பிரச்சனை அதாவது Places மெனுவில் உள்ள video, downloads, pictures ஆகிய அடைவுகளை திறந்தால் vlc திறப்பதாக நண்பர் என்னிடம் தெரிவித்தார். அதற்கான வழிமுறைகளை கூற தொலைபேசியில் சரிசெய்து கொண்டார். இதேபோல் பிரச்சனை பலருக்கும் வந்திருக்கும்.

அதாவது ஏதேனு ஒரு அடைவில் பாடல்களோ, வீடியோ கோப்புகளோ இருந்தால் அந்த அடைவில் கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் open with other applications->vlc என்று தேர்ந்தெடுத்தால் இதே மாதிரியான பிரச்சனை வரும். அப்படியே தேர்ந்தெடுத்திருந்தால் கீழே உள்ள remember this application for folder filer என்பதில் உள்ள டிக்கினை எடுத்து விட்டிருக்க வேண்டும்.

அதற்கு மேசையின் மீது கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் create folder தேர்ந்தெடுத்து ஒரு அடைவினை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பெயர் ஏதுவும் வைக்க தேவையில்லை.


அவ்வாறு உருவாக்கப்பட்ட அடைவில் கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் open with other applications->file browser என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.




1. file browser ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
2.remember this application for folder file என்பதில் டிக் செய்திட வேண்டும்.

பின்னர் open பொத்தானை அழுத்த Places மெனுவில் உள்ள அனைத்து அடைவுகளும் வழக்கம் போல் திறந்தன.

Saturday, April 9, 2011

உபுண்டு டெர்மினலில் உபயோகிப்பாளரை logout செய்ய



உபுண்டுவில் டெர்மினலில் உபயோகிப்பாளரை logout செய்ய கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

pkill -9 -u user name அல்லது

sudo pkil -9 -u username

என்று தட்டச்சு செய்தால் logout ஆகி login திரை வரும்.

கணினியில் என்ன process நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிய கீழ்கண்ட வரியை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

ps -fp $(pgrep -d, -u username)

இப்போது கணினியில் இயங்கி கொண்டிருக்கும் நிரல்களின் தொகுப்புகள் அனைத்தும் டெர்மினல் திரையில் வரும்.


Thursday, April 7, 2011

உபுண்டு டெர்மினலில் timezone அமைக்க

உபுண்டு டெர்மினலில் timezone எளிதில் அமைக்க முடியும். கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்வதன் மூலம் அமைக்க முடியும்.

tzselect என்று தட்டச்சு செய்தால் கீழ்கண்டவாறு டெர்மினலில் வரும்.



மேலே உள்ள விண்டோவில் நாம் எந்த கண்டமோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆசியா என்றால் 5 என்ற எண்ணை தட்டச்சு செய்து எண்டர் கீயை அழுத்தவேண்டும். இப்போது கீழ்கண்டவாறு டெர்மினலில் வரும்.



மேலே உள்ள விண்டோவில் பல்வேறு நாடுகளின் பெயர்களுடன் எண்களும் இருக்கும். இதில் இந்தியா என்றால் 14 என்பதனை தட்டச்சு செய்ய வேண்டும்.


இப்போது நாம் எந்த timezoneல் நம்முடைய கணினி இயங்கிகொண்டிருக்கிறது என்பதனை காட்டும். இதன் பின்னர் 1 என்று அழுத்த time zone உறுதியாகிவிடும்.

Tuesday, April 5, 2011

உபுண்டுவில் reliance netconnect

உபுண்டுவில் bsnl 3g பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். இப்போது reliance netconnect மூலமும் மிக எளிதாக இணைய இணைப்பு பெறலாம்.network manager மூலம் இதை பயன்படுத்த முடியும்.



Networkmanagerல் mobile broadband->Add சென்றால் இதனை செயல்படுத்திக்கொள்ளலாம்.


இதில் username, password பெற்று அதற்குரிய இடத்தில் தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர் apply பொத்தானை அழுத்தியவுடன் இணைப்பு கிடைத்துவிடும்


டெர்மினலில் lsusb என்று தட்டச்சு செய்தால் கீழ்கண்ட விண்டோ கிடைக்கும்.


மேலே உள்ள படத்தில் reliance netconnect usb portல் சொருகியவுடன் கணினி ஏற்று கொண்டதை காட்டுகிறது.

வேறு எந்த நிரலும் இதற்கேன நிறுவ தேவையில்லை.

Saturday, April 2, 2011

உபுண்டு டெர்மினலில் நெருப்பு நரியை இயக்க

உபுண்டுவில் நெருப்பு நரியை டெர்மினலில் இயக்க முடியும்.

முதலில் டெர்மினலில்

firefox என்று தட்டச்சு செய்ய வேண்டும். அல்லது

/usr/bin/firefox என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

புதியதாக ஒரு டேப்பில் இணைய தளத்தை திறக்க

/usr/bin/firefox www.ubuntuintamil.blogspot.com

என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

புதியதாக ஒரு விண்டோவில் இணையதளத்தை திறக்க

/usr/bin/firefox -new-window http://www.ubuntuintamil.blogspot.com/

என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

நெருப்பு நரியில் ஏதேனும் ஒரு வார்த்தையை கொடுத்து தேடவேண்டும் என்றால் கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்ய வேண்டும்.

/usr/bin/firefox -search "word"

நெருப்பு நரியில் preferences ஐ திறக்க வேண்டுமென்றால் Edit->preferences செல்ல வேண்டும். இதையே டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை கொடுத்தால் திறக்கலாம்.

/usr/bin/firefox -preferences

நெருப்பு நரியை default உலாவியாக வைப்பதற்கு கீழ்கண்ட வரியை தட்டச்சு செய்ய வேண்டும்.

/usr/bin/firefox -setDefaultBrowser

நெருப்பு நரி செல்லாமல் டெர்மினலில் அனைத்தையும் செய்ய முடியும்.