Pages

Friday, September 17, 2010

உபுண்டுவில் ntfs drive திறக்கும்போது கடவுச்சொல் செயல்படுத்துதல்

உபுண்டு 10.04 ல் விண்டோ ntfs drive திறக்கும்போது கடவுச்சொல் கேட்பதில்லை. இது நம்முடைய சொந்த கணினியாக இருக்கும்போது வைத்துக்கொள்ளலாம். ஆனால் பொது கணினியாக இருக்கும்போது கடவுச்சொல் இருப்பதே பாதுக்காப்பானதே.

இதற்கு முதலில் டெர்மினலில்

sudo -i என்று தட்டச்சு செய்து root ற்க்கு செல்ல வேண்டும். பின்னர்

gedit /var/lib/polkit-1/localauthority/10-vendor.d/com.ubuntu.desktop.pkla

என்று தட்டச்சு செய்து com.ubuntu.desktop.pkla என்ற கோப்பினை திறந்து கொள்ளவேண்டும். அதில் முதல் நான்கு வரிகளின் முன் # என்ற குறியை சேர்த்துகொண்டு சேமித்து வெளியேற வேண்டும்.

#[Mounting, checking, etc. of internal drives]
#Identity=unix-group:admin
#Action=org.freedesktop.udisks.filesystem-*;org.freedesktop.udisks.drive-ata-smart*
#ResultActive=yes

அதாவது கீழ்கண்ட படத்தினை போல் இருக்கும்



இப்போது விண்டோ ntfs drive திறந்தால் கடவுச்சொல் கேட்கும்.



com.ubuntu.desktop.pkla என்ற கோப்பானது /var/lib/polkit-1/localauthority/10-vendor.d/ என்ற அடைவினுள் உள்ளது.

No comments: