Pages

Friday, September 24, 2010

உபுண்டுவில் e-mail notification appelet

உபுண்டுவில் நமக்கு e-mail வரும்போது notification வருமாறு செய்ய முடியும். அதற்கு பதில் thunderbird உதவியுடன் அனுப்ப முடியும். இந்த நிரல் top panel ல் செயல்படுமாறு உள்ளது.



இந்த நிரலை தரவிறக்கி நிறுவ சுட்டி.

இந்த நிரலை இயக்க Applications->Internet->Popper configurator சென்று சில அமைப்புகளை அமைத்தால் போதும்.





மேலே உள்ள படத்தில் 5 இமெயில் முகவரி வரை வைத்துக்கொள்ளலாம். எத்தனை நிமிடத்திற்கு ஒருமுறை செக் செய்திடவேண்டும் என்வும் அமைத்துக்கொள்ளலாம். இதில் incoming mail server பெயர் உபயோகிப்பாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் அமைக்கவேண்டும்.


மேலே உள்ள படத்தில் தண்டர்பேர்டு உபயோகப்படுத்தினால் menu entriesல் மேற்கண்டவாறு அமைத்துக்கொள்ளவேண்டும். புதிய இமெயில் அனுப்ப முகவரி புத்தகத்தை பார்க்க என்று கட்டளைகள் கொடுக்க வேண்டும். இந்த நிரலின் default email client evolution ஆகும்.


மேலே உள்ள படத்தில் புதிய இமெயில் வந்தால் எந்த message notification ஆக வரவேண்டும் என்பதையும், எந்த ஒலி வரவேண்டும் என்பதையும் அமைக்கலாம்.


மேலே உள்ள மெனுவில் நாம் அமைத்த அமைப்புகள் சரியாக உள்ளத என சோதனை செய்ய test email connection பொத்தானை அழுத்துவதன் மூலம் அறியலாம்.


மேலே உள்ள மெனு உதவிகுறிப்புகள் அடங்கிய மெனுவாகும். எல்லாம் முடிந்தவுடன் save &exit பொத்தானை அழுத்தி வெளியேறிவிடவேண்டும். இப்போது புதியாதாக இமெயில் வந்தால் நமக்கு desktopல் தெரிவிக்கும். இதன் படம் மேலே கொடுத்துள்ளேன்.

No comments: