Pages

Sunday, May 9, 2010

உபுண்டுவில் random password உருவக்க

உபுண்டுவில் random password உருவாக்க ஒரு ஸ்கிரிப்ட். 9 எழுத்துக்கள் கொண்ட ஒரு கடவுச்சொல்லை உருவாக்க முடியும். ஸ்கிர்ப்டை கீழ்கண்ட சுட்டியிலிருந்து தரவிறக்கி கணினியில் செமித்துக்கொள்ளவேண்டும்.

password.sh

பின்னர் இதனை இயஙகூடிய நிலையில் வைக்க டெர்மினலில்

sudo chmod +x password.sh என்று தட்டச்சு செய்ய வேண்டும். password.sh என்பது கோப்பின் பெயராகும்.

இதனை இயக்க டெர்மினலில்

./password.sh என்று கட்டளை கொடுக்க வேண்டும். இதன் அவுட்புட்


9 எழுத்துக்கு பதிலாக 8 அல்லது10 எழுத்துக்கள் கூட வரவழைக்கலாம். இதற்கு password.sh கோப்பினை திறந்து அதில் சிறிய மாற்றம் செய்தால் போதும். டெர்மினலில்

sudo gedit password.sh என்று தட்டச்சு செய்தால் கோப்பு திறக்கும். அதில் LENGTH=9க்கு சென்று 9க்கு பதில் 8 அல்லது 10 போட்டுக்கொள்ளலாம்.



கடவுச்சொல் 8 எழுத்துக்கு மேல் இருந்தால் நல்லது. அதில் எழுத்துக்கள் பெரிய அல்லது சிறிய, எண்கள், குறியீடுகள் இவை அனைத்தும் கலந்து இருக்க வேண்டும்.

No comments: