Pages

Friday, April 2, 2010

உபுண்டுவில் windows xp யின் கடவுச்சொல்லை மாற்ற

புண்டுவில் windows xp யின் கடவுச்சொல் இருந்தால் அதை மாற்றிக்கொள்ளலாம்.இந்த கடவுச்சொல் மாற்ற பயன்படும் விண்டோவின் அடைவு

c:\WINDOWS\system32\config என்ற அடைவினுள் இருக்கும் SAM என்ற கோப்பில்தான் நாம் செயல்படுத்தப்போகிறோம்.

உபுண்டு நிறுவி இருந்தாலோ அல்லது livecd ஆக உபயொக்கிலாம். முதலில்

டெர்மினலில் கீழ்கண்ட நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

sudo apt-get install chntpw என்று தட்டச்சு செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும்.


முதலில் விண்டோஸ் நிறுவியிள்ள partionஐ mount செய்துக்கொள்ளவேண்டும். இதற்கு place சென்று குறிப்பிட்ட partionஐ கிளிக் செய்து கடவுசொல் கொடுத்து mount செய்ய வேண்டும்.

பின்னர் டெர்மினலில்

cd /media/system/WINDOWS/system32/config என்று தட்டச்சு செய்துகொள்ள வேண்டும்.
இப்போது டெர்மினலில் மேலே கண்ட படத்தில் வருவது போல் இருக்கும்.

இதில் system என்பது விண்டோஸ் partionக்கும் நாமே பெயர் கொடுத்துக்கொள்ளலாம். உபுண்டுவில் சிறிய மற்றும் பெரிய எழுத்துக்கள் வேறுபாடு உண்டும். அதனால் கட்டளை கொடுக்கும் முன் nautilus சென்று அதன் பெயர்களை குறித்துக்கொள்ள வேண்டும்.

இப்போது டெர்மினலில்

chntpw SAM என்று தட்டச்சு செய்தால் கீழ்கண்டவாறு விண்டோ வரும்.




இதன் கடைசியில் பல்வேறு optionகள் இருக்கும் அதை பயன்படுத்தி விண்டோஸின் கடவுச்சொல்லை மாற்றலாம்.


இது ஒட்டுமொத்தமாக கடவுச்சொல்லை மாற்றிவிடும். ஒரு குறிப்பிட்ட பயனளாருக்கான கடவுச்சொல்லை மாற்ற டெர்மினலில்

chntpw -u username SAM என்று தட்டச்சு செய்யவேண்டும். இங்கு username அவரவர் பெயரினை குறிக்கும்.

இது சொந்த உபயோகத்திற்கு மட்டும் அடுத்தவர் கணினியின் கடவுச்சொல்லை மாற்றுவதற்கு அல்ல. எனவே கணினியின் bios கடவுச்சொல் அவசியமாகிறது.

No comments: