Pages

Tuesday, March 2, 2010

உபுண்டுவில் remastersys backup கோப்புகளை நீக்குவதற்கு

உபுண்டுவில் remastersys பயன்படுத்தி கணினியை backup எடுக்கும் போதோ அல்லது distro iso கோப்பாக உருவாக்கும் போதோ remastersys என்ற அடைவினுள் backup கோப்புகள் இருக்கும். இதனால் கணினியில் வன்தட்டில் இடம் இல்லாமல் போய்விடும். அதனால் முதலில் இவற்றை நீக்குவதற்கு

sudo apt-get purge remastersys என்று டெர்மினலில் தட்டச்சு செய்து remastersys நிரலை uninstall செய்யவேண்டும். பின்னரி டெர்மினலில்

sudo apt-get autoremove என்று தட்டச்சு செய்து தேவையில்லாத கோப்புகளை அழித்துகொள்ளவேண்டும்.

டெர்மினலில்

sudo -i

பின்னர்

dir என்று தட்டச்சு செய்து /home/username/ என்ற அடைவினுள் Remastersys என்ற அடைவு இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

டெர்மினலில் இந்த அடைவை நீக்குவதற்கு

sudo rm -r Remastersys என்று தட்டச்சு செய்து remastersys என்ற அடைவை முற்றிலும் நீக்கிவிட்டு

sudo reboot என்று தட்டச்சு செய்து கணினியை மீண்டும் துவங்கவேண்டும். இப்போது கணினி வேகமாகவும் வன்தட்டில் அதிக இடமும் இருக்கும்.

தேவைப்பட்டால் மீண்டும் remastersys நிரலை நிறுவிக்கொள்ளலாம். அதிகம் இடம் பிடித்து மீண்டும் கணினி மெதுவாக இயங்கதொடங்கினால் மேலே சொன்ன வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.

No comments: