Pages

Tuesday, November 17, 2009

உபுண்டு 9.10க்கு மேம்படுத்தும் போது விஎல்சி சரிசெய்ய

உபுண்டு 9.10 மேம்படுத்தும் போது vlc சிலசமயங்களில் சரிவர வேலை செய்யாது. அப்போது கீழ்கண்ட சில வழிமுறைகளை கையாண்டு சரிசெய்யலாம்.

வழிமுறை 1.

டேர்மினலில் கீழ்கண்ட கட்டளையிட்டால் சரிசெய்யலாம்.

#sudo apt-get install libavcodec52

வழிமுறை 2.

ubuntu-restricted-extras நிறுவப்பட்டுள்ளதா என்று உறுதி செய்துகொள்ளவேண்டும். இல்லையேனில்

#sudo apt-get install ubuntu-restricted-extras என்று டேர்மினலில் தட்டச்சு செய்து நிறுவி கொள்ளவேண்டும்.

வழிமுறை 3.

mediubunt resipo வை செயலிழக்க செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்ளவேண்டும். பின்னர் டெர்மினலில்
#sudo apt-get remove --purge ffmpeg gstreamer0.10-ffmpeg gstreamer0.10-fluendo-mp3 gstreamer0.10-plugins-ugly liba52-0.7.4 libavcodec52 libavformat52 libavutil49 libdvdnav4 libdvdread4 libgsm1 libid3tag0 libmad0 libmpeg2-4 libpostproc51 libschroedinger-1.0-0 libsidplay1 libswscale0 libtwolame0 ubuntu-restricted-extras libavcodec52 libavformat52 libswscale0 libvlc2 libvlccore2 vlc vlc-data vlc-nox vlc-plugin-pulse
என்று தட்டச்சு செய்து எல்லவகையான codeக்களையும் அழித்துவிடவும்.

பின்னர் டெர்மினலில்

#sudo apt-get install ubuntu-desktop நிறுவி கொள்ளவேண்டும். ஏனெனில் இந்த நிரல் அழிக்கப்பட்டுஇருக்கும்.

பின்னர் கணினியை மீளதுவக்கி டெர்மினலில்

#sudo apt-get install ubuntu-restricted-extras என்று நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

வழிமுறை 4.

mediubuntu repo வை செயலிழக்க செய்யவேண்டும்.
#sudo apt-get --purge remove libx264-67 என்று தட்டச்சு செய்து குறிப்பிட்ட கோப்பை அழித்து மீண்டும் அதே கோப்பை நிறுவிக்கொள்ளவேண்டும்.

வழிமுறை 5

பின்வரும் கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்யவேண்டும்.
#sudo apt-get remove smplayer
#sudo apt-get remove mplayer
#sudo apt-get remove libx264-67 –purge
#sudo apt-get install libx264-67
#sudo apt-get install smplayer
#sudo apt-get install mplayer
#sudo apt-get install vlc

மேற்கண்ட முறைகளினால் விஎல்சி வேலை செய்ய துவங்கும்.

No comments: